விநாயகர் சதுர்த்தி கொண்டாடலாமா? வேண்டாமா? – தமிழக அரசு ஆலோசனை!
தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்த முடிவுகளை எடுக்க தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் வாங்கப்பட்டு தெருக்களில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு பின்னர் ஆறுகளிலும், கடல்களிலும் கரைக்கப்படுவது வாடிக்கை. ஆனால் தற்போதைய சமயம் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது குறித்த கேள்வி எழுந்துள்ளது.
சிலைகள் வாங்கி பூஜை செய்ய அனுமதித்தால் மக்கள் கூடும் அபாயமும் உள்ளது. எனவே இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடலாமா? கொண்டாடினால் பாதுகாப்பு நடவடிக்கைகளோடு கொண்டாட இயலுமா என்பது குறித்து மத தலைவர்களுடன் இன்று தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இந்த அலோசனை கூட்டத்திற்கு பிறகு இது குறித்து முதல்வருடனான ஆலோசனை நடைபெறும் என்றும், அதன் பிறகே இதுகுறித்த முக்கிய முடிவுகள் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.