ஹோட்டல்களில் மாட்டிறைச்சி விற்பனை செய்ய தடை..எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு..!
அசாம் மாநிலத்தில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் மாட்டிறைச்சி விற்பனை செய்ய தடை விதித்து அங்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அசாம் மாநிலத்தில் முதல்வர் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், திடீரென மாநிலம் முழுவதும் ஹோட்டல்கள், சிறிய உணவகங்கள், பொது இடங்கள் ஆகியவற்றில் மாட்டிறைச்சி விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். "மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அரசு தலையிடக்கூடாது; இது சர்வாதிகாரத்தை நோக்கி செல்லும். இதுபோன்ற உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது," என சமாதிவாதி எம்பி மற்றும் சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவைச் சேர்ந்த எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்.
எந்த ஒரு உணவிற்கும் தடை விதிக்கக்கூடாது. அசாமில் மாட்டுக் கறிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை பாஜக ஆளும் கோவா, அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர் ஆகிய பகுதிகளில் ஏன் விதிக்கவில்லை? என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
உணவுக்காக பசுக்கள் வெட்டப்படுவதில்லை; எருமைகளும் காளைகளும் மட்டுமே வெட்டப்படுகின்றன. "எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்பது அவரவர் விருப்பம். அந்த உரிமையில் யாரும் தலையிடக்கூடாது," என கேரள பாஜக துணைத் தலைவர் மனோகர் ரவி கூறியுள்ளார்.
Edited by Siva