வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 15 செப்டம்பர் 2024 (09:57 IST)

இன்று அரசு தேர்வு: இணைய சேவையை கட் செய்த மாநில அரசு..!

அசாம் மாநிலத்தில் இன்று அரசு தேர்வு நடைபெறுவதை அடுத்து இணையதளம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

அரசு பணிகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று அசாம் மாநிலத்தில் நடைபெற உள்ள நிலையில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாநிலம் முழுவதும் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும் விதமாக மாநிலம் முழுவதும் செல்போன் தொடர்புடைய அனைத்து இணையதள சேவைகள் துண்டிக்கப்படுவதாக அசாம் மாநில அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உள்துறை தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அசாம் மாநிலத்தில் இன்று அரசு பணிகளுக்கு எழுத்து தேர்வு நடைபெற உள்ளதை கருத்தில் கொண்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்கும் வகையில் செல்போன் தொடர்புடைய அனைத்து இணையதள சேவைகளும் நிறுத்தப்படும்.

இந்த கட்டுப்பாடு மொபைல் போன் சேவைகளுக்கு மட்டுமே.  அதே வேளையில் தொலைபேசி இணைப்புகள் அடிப்படையில் குரல் அழைப்புகள் மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகள் ஆகியவை வழக்கம் போல் செயல்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva