செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 31 மார்ச் 2020 (15:41 IST)

கொரோனா தடுப்பு நிதியாக சிவகார்த்திகேயன் கொடுத்த மிகப்பெரிய தொகை

நடிகர் கார்த்திகேயன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி வருமானம் இன்றி இருக்கும் பெப்ஸி தொழிலாளர்களுக்கான ரூபாய் 10 லட்சம் நிதி உதவி செய்தார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் சீரிய முறையில் செய்து வரும் தமிழக அரசுக்கு உதவி செய்யும் வகையில் தமிழக முதலமைச்சரின் கொரோனா தடுப்பு நடவடிக்கை நிதியாக ரூபாய் 25 இலட்சத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கியுள்ளார் 
 
கொரோனா தடுப்பு பணிகளுக்காக தாராளமாக நிதி வழங்க வேண்டுமென சமீபத்தில் பிரதமர் மோடி அவர்களும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து கோலிவுட் திரையுலகில் முதல் நபராக நடிகர் சிவகார்த்திகேயன் ரூபாய் 25 லட்சம் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மேலும் சில நடிகர்கள் விரைவில் கொரோனா நிவாரண நிதி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது