1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 11 அக்டோபர் 2020 (10:51 IST)

இந்திய ஒற்றுமையை பறைசாற்றும் பாட்டு! – வைரலான மாணவியின் பாடலுக்கு பிரதமர் வாழ்த்து!

இந்திய கலாச்சார ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக கேரள சிறுமி பாடியுள்ள பாடலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களுக்கு இடையே கலாச்சார ஒற்றுமையை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசால் ஏக் பாரத் ஸ்ரேஸ்த் பாரத் என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டம் குறித்த இமாச்சல பிரதேசத்தின் மொழியிலான பாடல் ஒன்றை கேரளாவை சேர்ந்த பள்ளி மாணவி தேவிகா என்பவர் பாடியுள்ளார்.

இதை அவரது பள்ளி நிர்வாகம் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில் சிறுமியின் பாடல் குறித்து இமாச்சல பிரதேச முதல்வரும் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் பாடலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி ”தேவிகா அவரது பாடலால் நம்மை பெருமையடைய செய்துள்ளார். அவரது மென்மையான பாடல் ஒரே இந்தியா, சிறந்த இந்தியா என்ற சாரம்சத்தினை வலுப்படுத்தி இருக்கிறது” என்று கூறியுள்ளார்.