செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 31 மே 2022 (09:40 IST)

ஆர்யன்கான் வழக்கை விசாரித்த அதிகாரி சென்னைக்கு மாற்றம்

aryan khan
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி சென்னைக்கு மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்
 
இந்த வழக்கை போதை பொருள் தடுப்பு அதிகாரி சமீர் வான்கடே என்பவர் விசாரணை செய்து வந்த நிலையில் அவரது விசாரணை சரியில்லை என்பதால் அவர் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி அவர் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு இருந்தது.
 
இந்த நிலையில் தற்போது சென்னையிலுள்ள வரி செலுத்துவதற்கான சேவைகள் இயக்குனர் அலுவலகத்திற்கு சமீர் வான்கடே மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது அவர் மீது எழுந்த புகாரை அடுத்து அவருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது