செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 27 மே 2022 (20:33 IST)

சிறப்பாக பணியாற்ற காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம்!

stalin medal
சிறப்பாக பணியாற்ற காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம்!
சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழாவில், காவல்துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்புப் படை மற்றும் தடய அறிவியல் துறையினருக்கு சிறப்பாக பணியாற்றியமைக்காக பதக்கங்களை மாண்புமிகு  முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்
 
முன்னதாக சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதக்கங்கள் வழங்கும் விழாவில், தமிழ்நாடு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மாண்புமிகு முதலமைச்சர்  முக ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டார்