வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2024 (15:44 IST)

சிஏஏ சட்டத்தை இந்திய முஸ்லிம்கள் வரவேற்க வேண்டும்: அனைத்திந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர்

சிஏஏ  சட்டத்தை இந்திய முஸ்லிம்கள் வரவேற்க வேண்டும் என்று அனைத்திந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார் 
 
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது இந்திய அரசு குடியுரிமை சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ள நிலையில் இந்த சட்டத்தை நான் வரவேற்கிறேன். இந்த சட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டியது. தாமதமானாலும் தற்போது அமலுக்கு வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி 
 
இந்த சட்டம் குறித்து இந்திய முஸ்லிம்கள் மத்தியில் தவறான புரிதல்கள் உள்ளது. இந்த சட்டத்திற்கும் இந்தியாவில் உள்ள முஸ்லிமுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் வங்கதேசத்தில் இருந்து வரும் முஸ்லிம்கள் அல்லாதவருக்கு குடியுரிமை வழங்கவே வழங்க ஏதுவாக  இந்த சட்டம் கொண்டு வந்துள்ளது 
 
எனவே இந்திய முஸ்லிம்கள் இந்த சட்டத்தை வரவேற்க வேண்டும். யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் அம்சம் இந்த சட்டத்தில் இல்லை என்பதையும் பாகிஸ்தானில் இருந்து அவதிப்பட்டு வரும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran