செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 4 ஜூலை 2018 (11:23 IST)

முதல்வர்-ஆளுனர் யாருக்கு அதிகாரம் அதிகம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

டெல்லியில் முதலவ்ர், துணை நிலை ஆளுனர் ஆகிய இருவரில் யாருக்கு அதிகாரம் அதிகம் என்பது குறித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் சற்றுமுன் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
 
டெல்லி மற்றும் புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கும், மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்ட துணைநிலை ஆளுனருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதல்வர், துணை நிலை ஆளுனர் இருவரில் யாருக்கு அதிகாரம் அதிகம் என்பது குறித்த வழக்கில் துணை நிலை ஆளுனருக்கே அதிகாரம் அதிகம் என சமீபத்தில் டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்தது
 
ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு கடந்த சில வாரங்களாக விசாரணை செய்யப்பட்டு சற்றுமுன் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
 
இதன்படி துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்றும் அவர் அமைச்சரவையுடன் இணக்கமாக செயல்பட வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் அதற்காக எல்லா விஷயங்களிலும் அமைச்சரவைக்கு துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் தரவேண்டும் என்ற அவசியமில்லை என்று தெரிவித்துள்ளனர். நிர்வாக அதிகாரம் முழுவதும் தேர்தெடுக்கப்பட்ட அரசிடமே உள்ளது என்றும் ஜனநாயகத்தில் அதிகாரம் தொடர்பான குழப்பத்துக்கு இடமில்லை என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
 
மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகள் மீது துணைநிலை ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும் என்றும் மக்கள்நல திட்டங்கள் துணைநிலை ஆளுநரால் தாமதமானாலும், அரசால் தாமதமானாலும் இருவருமே பொறுப்பு  என்றும், மொத்தத்தில் மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக செயல்படுவதே சாலச்சிறந்ததாக இருக்கும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்