1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 2 ஜூலை 2018 (16:34 IST)

நான் செயல்படாத தலைவர்னா.. எடப்பாடி என்ன எடுபிடி முதல்வரா? - ஸ்டாலின் காட்டம்

தஞ்சையில் திருமண நிகழ்வில் பேசிய ஸ்டாலின் எடப்பாடி அரசு எடுபிடி அரசு என கூறிள்ளார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண விழா ஒன்றிற்கு திமுக செயல் தலைவர் நேரில் சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர் என்னை தமிழக முதலமைச்சர் ஒரு திருமண விழாவில் செயல்படாத தலைவருக்கு ஏன் செயல் தலைவர் என பெயர் வேண்டும் என கூறியிருக்கிறார்.
 
நான் செயல் படாத தலைவராக இருக்கலாம், அது கேவலமல்ல ஆனால் மதவாத சக்திகளுக்கு பயந்து எடுபிடியாய் ஆட்சி நடத்துவது தான் கேவலம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விளாசி பேசியுள்ளார் ஸ்டாலின்.