வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 23 மார்ச் 2024 (23:27 IST)

வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் மாற்று ஆவணங்களை கொண்டு வாக்களிக்க ஏற்பாடு

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்  என்று தெரிவித்துள்ளது.

18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார்.
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில், வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் மாற்று ஆவணங்களை கொண்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாவது: 
 
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்  என்று தெரிவித்துள்ளது.
 
அதன்படி, ஆதார் அட்டை, தேசிய ஊரக வேலை  உறுதியளிப்பு திட்ட பணி அடையாள அட்டை, புகைப்படிவத்துடன் கூடிய வங்கி / அஞ்சல் புத்தகம், ஓட்டுனர் உரிமம், பேன் கார்டு, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், எம்பி/ஏம்.எல்.ஏக்களின் அடையாள அட்டை உள்ளிடவற்றில் ஏதேனும் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.