1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 23 மார்ச் 2024 (23:39 IST)

அசைவம் சாப்பிட்டு கிருஷ்ணர் வேடத்தில் நடிக்கும் பிரபாஸுக்கு எதிர்ப்பு..

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பிரபாஸ். இவர் ராஜமெளலியின் பாகுபலி   படத்தில் நடித்தபின்,   இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களால் அறியப்படுகிறார்.
 
அதன்பின்னர், இவரது ராதே ஸ்யாம் சலார்  உள்ளிட்ட படங்கள் பான் இந்திய திரைப்படமாக வெளியானது. தற்போது கல்கி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
 
இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
 
இப்படம் கிருஷ்ணரின் 10 வது அவதாரமான கல்வி அவதாரத்தை வைத்து தயாராவதாகவும், இப்படத்தில் கிருஷ்ணர் வேடத்தில் பிரபாஸ் நடிப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் நடிகர் பிரபாஸ் கல்கி ஷூட்டிங்கின்போது அசைவம் சாப்பிடுகிறார். கடவுள் கிருஷ்ணராக நடித்துக் கொண்டு அவர் எப்படி அசைவம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்? என   ஒரு இந்தி விமர்சகர் பதிவிட்டிருந்தார்.
 
இது சமூக வலைதளங்களில் பரவலான   நிலையில், பலரும் இதுபற்றி கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
 
ரூ.600 கோடி பட்ஜெட்டில்,  நாக் அஸ்வின்  இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸுடன் இணைந்து கமல், ராணா, அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிக்கின்றனர், சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.