வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 செப்டம்பர் 2024 (10:15 IST)

வன்கொடுமை செய்து அந்தரங்க உறுப்பில் கண்ணாடியை திணித்த ராணுவ அதிகாரி! பெண் பரபரப்பு புகார்!

abuse

மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவரை ராணுவ அதிகாரி வன்கொடுமை செய்ததுடன், அந்தரங்க உறுப்பில் கண்ணாடியை நுழைத்து காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் பகுதியில் வங்கி மேலாளராக பணியாற்றி வருபவர் 35 வயது பெண் ஒருவர். அவர் நேற்று நடக்க முடியாமல் வலியில் தள்ளாடியபடி அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரை போலீஸார் அமரவைத்து விசாரித்தபோது அவர் சொன்ன சம்பவம் அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

வங்கி மேலாளர் பெண் மோவ் பகுதியில் இருந்தபோது ராணுவ அதிகாரி சஞ்சய் யாதவ் என்ற நபர் அவருக்கு கேண்டீன் அட்டை தந்து உதவியதன் மூலம் அறிமுகமாகியுள்ளார். சில நாட்களில் அவர் அசாமுக்கு மாற்றலாகி சென்று விட்ட நிலையில் சமீபத்தில் ஊர் திரும்பியுள்ளார்.
 

 

வங்கி மேலாளர் பெண்ணிடம் நைச்சியமாக பேசிய அவர் ஒரு ஹோட்டலுக்கு வர செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் குடிபோதையில் கண்ணாடியை பெண்ணின் பிறப்புறுப்பில் செலுத்தி சித்ரவதை செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் ராணுவ அதிகாரி சஞ்சய் யாதவ்வை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 

Edit by Prasanth.K