வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (16:10 IST)

பட்டப்பகலில் பொது இடத்தில் பாலியல் வன்கொடுமை.. வேடிக்கை பார்த்து வீடியோ எடுத்த பொதுமக்கள்..!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் பட்டப்பகலில் பொது இடத்தில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நடந்தபோது அந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த பொதுமக்கள் வீடியோ எடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் என்ற பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை பட்டப் பகலில் சாலையோர நடைபாதையில் லோகேஷ் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தார் .

இதை அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்ததாகவும், வன்கொடுமையை தடுக்க முயற்சி கூட செய்யாதது மட்டுமின்றி அதை வீடியோ எடுத்தது சமூக வலைதளங்களில் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண், லோகேஷ் என்பவர் மீது புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த அவர் மது போதையில் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வரும் நிலையில் பலர் இந்த வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பட்டப் பகலில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படும்போது அதை தடுக்க முயற்சி செய்யாதது மட்டுமின்றி அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது அருவருக்கத்தக்க செயல் என்று விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

Edited by Mahendran