செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2024 (12:18 IST)

AI மூலம் இளம்பெண் ஆபாச சித்தரிப்பு! மிரட்டி வன்கொடுமை செய்த சிறுவர்கள்!

crime

மத்திய பிரதேசத்தில் இளம்பெண்ணை ஏஐ தொழில்நுட்பம் மூலமாக ஆபசமாக சித்தரித்து மிரட்டி சிறுவர்கள் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

மத்திய பிரதேசம் மாநிலம் ஷதோல் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது நர்சிங் மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு தங்கி படித்து வந்துள்ளார். அந்த வீட்டின் உரிமையாளரின் மகன் அந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாசமாக சித்தரித்துள்ளான்.

 

பின்னர் அதை தனது நண்பனிடமும் காட்டியுள்ளான் அந்த சிறுவன். பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த சித்தரிக்கப்பட்ட புகைப்படத்தை காட்டி இளம்பெண்ணை மிரட்டியுள்ளனர். தங்கள் ஆசைக்கு இணங்காவிட்டால் அந்த படத்தை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி வன்கொடுமை செய்துள்ளனர்.
 

 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் பேரில் 2 சிறுவர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர். சிறுவர்கள் ஏஐ தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி இளம்பெண்ணை வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K