செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2020 (08:15 IST)

இனி பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்க விமானங்கள் பறக்காதா ? – எச்சரித்த பெடரேஷன் !

பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் இனி அமெரிக்க விமானங்கள் பறப்பதைத் தவிர்க்க வேண்டும் என அமெரிக்க விமான ஒழுங்குமுறை பெடரல் ஏவியேஷன் தெரிவித்துள்ளது.

அமெரிக்க விமான ஒழுங்குமுறை பெடரல் ஏவியேஷன் அமெரிக்க விமானங்கள் பாகிஸ்தான் வான்வழி எல்லையில் செல்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரித்துள்ளது. அமெரிக்க சிவில் விமானப் போக்குவரத்துக்குத் தொடர்ந்து ஆபத்து உள்ளதால் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களால் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லையில் பதற்றம் அதிகமாக உள்ள நிலையில் அமெரிக்காவின் இந்த எச்சரிக்கை பாகிஸ்தானுக்கு கௌரவ பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் தனது வான்வழியை இந்தியாவுக்குத் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.