லைகர் படுதோல்வி…. சமூக வலைதளங்களை விட்டே சென்ற நடிகை!
லைகர் படத்தின் ரிலீஸூக்குப் பின்னான விமர்சனங்கள் படத்தின் வசூலை கடுமையாக பாதித்துள்ளன.
விஜய் தேவரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள லைகர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியானது. இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது இந்த படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால் ரிலீஸூக்கு பின்னர் மிக மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதனால் படத்தின் வசூல் பெரியளவில் பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் பல கோடிக் கணக்கில் நஷ்டமடையக் கூடும் என சொல்லப்படுகிறது.
இதனால் ஒட்டுமொத்த படக்குழுவினரும் அப்செட்டில் உள்ளனர். தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகை சார்மி, படத்தின் தோல்வியால் தற்காலிகமாக சமூகவலைதளங்களை விட்டே விலகுவதாக அறிவித்துள்ளார்.