திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 3 செப்டம்பர் 2022 (15:45 IST)

குறுக்கே வந்த நாய்: பைக்கில் சென்ற ஓட்டுனர் கீழே விழுந்து உயிரிழப்பு!

tuticorn
கோவில்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற  ஒருவர் குறுக்கே நாய் வந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

நம் நாட்டில் வீட்டில்  நாய் வளர்ப்பவர்கள், அவற்றை முறையாக வீட்டில் வைத்து வளர்ப்பவர்கள் இருந்தாலும் ஒரு சிலர் நாய்களை  அவிழ்த்துவிடுகின்றனர். இதனால், அந்த நாய்கள் எங்கு செல்கிறோம் என்பதே தெரியாமல், வீதியில் இருக்கும் குழந்தைகளையும் மக்களையும் அச்சுறுத்துவதுடன் அவர்களைக் கடிக்கவும் செய்கிறது.  பைக்கில் செல்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தற்போது கோவியில்பட்டி அருகே, இரு சக்கரவாகனத்தில் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுனர், நாய் ஒன்று குறுக்கே வந்ததால், நிலைதடுமாறி கீழ் விழுந்தார்.

அருகில் இருந்தோர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.