ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (14:15 IST)

கவர்மெண்ட் காசில் குடும்பத்தோடு ஃபாரின் டிரிப்: ஜெகன் மீது விழுந்த பேரிடி!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அரசு பணத்தில் குடும்பத்துடன் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
 
ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற நாளில் இருந்தே பல அதிரடி திட்டங்களை அறிவித்து, ஆந்திர மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து வருகிறார். இந்நிலையில் அவர் ஜெருசலம் சென்றுள்ளார். 
ஆம், ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையும் முன்னாள் முதல்வருமான ராஜசேகர ரெட்டி குடும்பத்தோடு கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார். அதனைத்தொடர்ந்து ஆண்டுதோறும் ஜெருசலேம் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். 
 
இந்நிலையில் அதை பின்பற்றும் வகையில் ஜெகம் மோகன் ரெட்டி தனது குடும்பத்துடன் ஜெருசலேம் சென்றிருக்கிறார். ஆகஸ்ட் 5 ஆம் தேதி டெல்லி திரும்பும் ஜெகன் மோகன் ரெட்டி, அங்கு மத்திய அமைச்சர்களை சந்திக்கவுள்ளாராம். 
இதனையடுத்து வருகிற ஆகஸ்டு 15 ஆம் தேதி, சொந்த காரணங்களுக்காக அமெரிக்காவிற்கு செல்லவுள்ளார். இந்த வெளிநாட்டு பயணத்திற்கு அரசு பணத்தை ஏற்க ஜெகன் மறுத்தார் என செய்திகள் முன்னர் வெளியானது. 
 
ஆனால், இப்போது ஜெகன் மோகனின் ஜெருசலம் பயணத்துக்கு ரூ.22.52 லட்சத்தை ஆந்திர அரசு ஒதுக்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஆம், இந்த தொகை அவரின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆந்திர பொதுத்துறை செய்திகள் தெரிவிக்கின்றன என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.