1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 12 டிசம்பர் 2019 (07:44 IST)

மது வாங்குவதற்கு என தனியாக மைக்ரோசிப் கார்ட்: முதல்வரின் அதிரடி நடவடிக்கை

மது விற்பனையை படிப்படியாக குறைக்க வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ள ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அடுத்த அதிரடி நடவடிக்கையாக மது வாங்குபவர்களுக்கு என தனியாக லிக்கர் கார்ட் என்ற மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்கும் கார்ட் வழங்கப்படும் என்றும் இந்த கார்ட் வழங்கப்படுபவர்களுக்கு மட்டுமே மது சப்ளை அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார் 
 
இந்த கார்ட் 25 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும், இந்த கார்டை பெற விரும்புபவர்கள் ஆதார் கார்ட் மட்டும் பான் கார்டை கொடுத்து பெற்றுக் கொண்டு, ஐந்தாயிரம் ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் ஒரு கார்டை பயன்படுத்தி நாளொன்றுக்கு 3 பாட்டில்கள் மட்டுமே ஒரு நபர் மது வாங்க முடியும் என்றும், அதற்கு மேல் வாங்க முடியாது என்றும் தெரிவித்துள்ள ஆந்திர அரசு விரைவில் இந்த திட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த திட்டம் அமலுக்கு வந்தால் லிக்கர் கார்டு உள்ளவர்கள் மட்டுமே மது வாங்க முடியும் என்பதால் 25 வயதிற்கு குறைவானவர்கள் மது வாங்க முடியாத நிலை ஏற்படும் என்றும் சிறு வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் பழக்கம் இதனால் கட்டுப்படுத்தப்படும் என்றும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது
 
இந்த முறையை பின்பற்றி மற்ற மாநிலங்களும் லிக்கர்ட் கார்டு முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் கடந்த சில ஆண்டுகளாக பள்ளி மாணவர்கள் உள்பட சிறு வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் பழக்கம் அதிகமாகி வருவதை இதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்