வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 27 டிசம்பர் 2019 (12:04 IST)

முஸ்லிம் பையன் வீட்டுக்கு நான் ஏன் போகனும்? அமைச்சரின் கேவலமான பேச்சு!

நான் எதற்கு முஸ்லிம் வீட்டிற்கு போக வேண்டும் என புறக்கணித்த உத்தரபிரதேச அமைச்சரின் செயலால் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
குடியுரிமை சட்ட திருத்ததிற்கு எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்ற போது போரட்டகாரர்களும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. குறிப்பாக உத்திரபிரதேசத்தில் பிஜ்னோர் மாவட்டத்தில் கடந்த வாரம் நடைபெற்ற  போராட்டத்தில் இந்து மதத்தைச் சார்ந்த ஓம் ராஜ் சைனி என்ற இளைஞரும், அனஸ் மற்றும் சுலைமான் ஆகிய இரு இஸலாமிய இளைஞர்களும் பலியாகினர்.  
 
இந்நிலையில், அமைச்சர் கபில்தேவ் அகர்வால் கலவரத்தில் இறந்த ஓம் ராஜ் சைனியின் குடும்பத்தரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். ஆனால், இந்த இரு முஸ்லிம் இளைஞர்கள் வீட்டிற்கு நான் ஏன் போக வேண்டும் என கேட்டுள்ளார். 
 
மேலும், நான் ஏன் கலவரம் செய்தவர்களது இல்லத்திற்குச் செல்ல வேண்டும்? நான் ஏன் கலவரக்காரர்களை பார்க்க வேண்டும்? என கேள்வி எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.