திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 26 டிசம்பர் 2019 (16:58 IST)

கெட் அப்பை மாற்றிய கனிமொழி; ஏகத்துக்கும் கலாய்க்கும் இணையவாசிகள்!

எம்பி கனிமொழி தனது வழக்கமான தோற்றத்தில் இருந்து மாறுப்பட்டு இருப்பதை  இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர். 
 
குடியுரிமை மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இன்று குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக சென்னையில் நடைபெற்ற தொடர் இசை முழக்கப் போராட்டத்தில் கனிமொழி கலந்துக்கொண்டார். 
 
போராட்டத்தில் பங்கேற்ற சில புகைப்படங்களையும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் வழக்கத்திற்கு மாறாக உடை, சிகை அலங்காரம் என அனைத்தும் வித்தியாசமாக உள்ளது. இதனை கண்ட சிலர் மம்தா பேனர்ஜி போல உள்ளதாவும், சிலர் அம்மாவை காப்பி அடிக்க ட்ரை பண்ணி இருக்கிறார் எனவும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.