1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (20:07 IST)

வீடுகட்ட ரூ.35,000 அறிவிப்பு

வீடுகட்ட ரூ.35 ஆயிரம் வழங்கப்படும் என ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

அம்மாநிலத்தில் முதல்வர் பதவி ஏற்றதில் இருந்து பல புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை அறிவித்து வருகிறார் முதல்வர் ஜெகன்மோகன்.

இந்நிலையில், சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த வீட்டுத் திட்ட பயனாளிகளுக்கு கூடுதலாக ரூ.35000 கடனாக வழங்க ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது அங்குள்ள மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.