செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சனிக்கிழமையில் வரும் பிரதோஷ வழிபாடும் சிறப்புக்களும் !!

சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும். சகல செளபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும். 

சனிப்பிரதோஷம் தினம் செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன. 
 
இன்று சனிப்பிரதோசம் இன்று அருகில் இருக்கும் சிவ ஆலயம் சென்று சனிபகவானை வணங்க சனி பகவானால் ஏற்பட்ட தோஷங்களும் நீங்கும். 
நமக்கு வரும் நோய்களும், துன்பங்களும் முன்ஜென்ம பாவத்தின் சம்பளமாக கிடைக்கிறது. அந்த பாவங்கள் தீர இப்பிறவியில் நிறைய நன்மைகளை செய்ய வேண்டும். 
 
ஆலய தரிசனம் செய்வதும், இறைவனுக்கு அபிஷேகத்திற்கு பொருட்களை வாங்கிக் கொடுப்பதும் நமது முன்ஜென்ம பாவங்களை போக்கும். இதன் மூலம் நோய்கள் நீங்கும். 
 
முன்ஜென்ம பாவங்கள் நீங்கவும், நோய்கள் தாக்காமல் ஆரோக்கியமாக வாழவும் சனி மகா பிரதோஷ நாளில் சிவன், நந்திக்கு அபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். 
 
சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு. நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.
 
மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும். எனவே, பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது, அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது. 
 
எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.