திங்கள், 5 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 18 ஏப்ரல் 2022 (14:04 IST)

தண்ணீருக்கு பதில் தவறுதலாக ஆசிட்டைக் கொடுத்த கடைக்காரர்…. மோசமான நிலையில் இளைஞர்!

தண்ணீருக்கு பதில் தவறுதலாக ஆசிட்டைக் கொடுத்த கடைக்காரர்…. மோசமான நிலையில் இளைஞர்!
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது. சம்மந்தபட்ட மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

ஆந்திராவின் விஜயவாடாவில் படித்துவரும் சைதண்யா கொசூரு என்ற மாணவர் நண்பர்களோடு சேர்ந்து வாலிபால் விளையாட சென்றுள்ளார். விளயாடி முடித்துவிட்டு கடைக்கு சென்ற அவர் தண்ணீர் கேட்டுள்ளார். ஆனால் கடையில் அவசரமாக வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த கடைகாரர் தவறுதலாக தண்ணீருக்குப் பதில் ஆசிட்டைக் கொடுத்துள்ளார். அதைக் குடித்த சைதண்யாவுக்கு உடல்நிலை மோசமானதை அடுத்து உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனாலும் அவரின் உள் உடல் பாகங்களில் ஆசிட்டால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது அவர் மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் ஐசியுவில் வைக்கப்பட்டுள்ளார்.