புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 24 ஜூலை 2020 (21:27 IST)

ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

தமிழகத்தில் மட்டுமின்றி தமிழகத்தின் அண்டை மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை பார்ப்போம்
 
கேரளாவில் இன்று 885 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு என்றும், 968 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர் என்றும், இதுவரை கேரளாவில் 16,995 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கேரள சுகாதாரத்துறை அறிவித்துளது.
 
அதேபோல் ஆந்திர பிரதேச மாநிலத்தில் இன்று 8,147 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், அம்மாநிலத்தில் இதுவரை 80,858 பேர் மொத்தம் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், 933 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாகவும், 39,935 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் கர்நாடகாவில் இன்று புதிதாக 5,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், கடந்த 24 மணிநேரத்தில் 110 பேர் கர்நாடகாவில் உயிரிழந்திருப்பதாகவும், இதுவரை மொத்தம் 85,870 பேர் பாதிப்பு அடைந்துள்ள்ளதாகவும், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,724 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது