திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 12 ஜூலை 2021 (12:56 IST)

பேரனுக்கு திருமணம் செய்ய பேத்தியை கடத்திய பலே பாட்டி! – போலீஸார் வலைவீச்சு!

ஆந்திராவில் மகன் வழி பேரனுக்கு மணம் முடிப்பதற்காக 14 வயது சிறுமியான மகள் வழி பேத்தியை பாட்டியே கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருச்சானூர் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி வகுளம்மா. இவர் தனது மகன் வழி பேரனான முரளி கிருஷ்ணாவிற்கு மகள் வழி பேத்தியான 14 வயது சிறுமியை திருமணம் செய்து வைக்க எண்ணியுள்ளார். இதற்கு சிறுமியின் வீட்டில் மறுத்ததாக தெரிகிறது.

இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்னால் சிறுமியை தனியாக சந்தித்த பாட்டி வகுளம்மா பேத்தியை கடத்தி சென்றுள்ளார். திருமணம் செய்து வைக்க சொந்த பேத்தியையே பாட்டி கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தலைமறைவான பலே பாட்டியை தேடும் பணியில் ஆந்திர போலீஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.