செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (12:46 IST)

ஆந்திராவில் முதல் ஒமிக்ரான் பாதிப்பு! – மொத்த பாதிப்பு 35 ஆக உயர்வு!

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு மெல்ல உயரத் தொடங்கியுள்ள நிலையில் ஆந்திராவில் முதல் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்புகள் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும் ஒமிக்ரான் சோதனை மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து மகராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு வந்த பலருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் முதன்முறையாக வெளிநாட்டிலிருந்து ஆந்திரா வந்த நபருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட அந்த நபர் அயர்லாந்தில் இருந்து மும்பை வழியாக விசாகப்பட்டிணம் வந்துள்ளார். அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் இந்தியாவில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.