இனி கல்லூரிகளில் ஆன்லைன் தேர்வு கிடையாது! – யூஜிசி அறிவிப்பு!
இனி நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைகழகங்களில் ஆன்லைன் தேர்வு நடத்தக்கூடாது என பல்கலைகழக மானியக்குழு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக கல்லூரிகள், பல்கலைகழகங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் பாடங்கள் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டதுடன், தேர்வுகளும் ஆன்லைன் வாயிலாகவே நடத்தப்பட்டது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் கல்லூரிகள், பல்கலைகழகங்கள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பல்கலைக்கழக மானியக் குழு இந்தியா முழுவதும் உள்ள பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி கல்லூரிகள், பல்கலைகழகங்கள் ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தக் கூடாது என்றும், வழக்கம்போல நேரடி எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி தேர்வுகளை நடத்துமாறும் யூஜிசி அறிவுறுத்தியுள்ளது.