செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (09:43 IST)

”என்னோடு உறவு கொண்டால் சக்தி கிடைக்கும்?” – பெண்களை சீரழித்த போலி பாபா கைது!

ஆந்திராவில் தன்னோடு உறவு வைத்து கொண்டால் நேர்மறை சக்திகள் கிடைக்கும் என பெண்களை ஏமாற்றிய போலி பாபாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆந்திரா மாநிலம் நந்திகாமா பகுதியை சேர்ந்தவர் விஸ்வ சைதன்யா. ஐதராபாத்தில் கடந்த 2002ம் ஆண்டில் கம்ப்யூட்டர் மையம் நடத்திய இந்த நபர் சீட்டு பிடிப்பதாக கூறி பொதுமக்களிடம் ரூ.1 கோடி ஏமாற்றியதாக கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் வெளிவந்துள்ளார். பின்னர் தன்னை சாய் பாபா பக்தனாக மாற்றி கொண்டு பெயரையும் சாய் விஸ்வ சைதன்யா என மாற்றி கொண்ட நபர் சாய் ச்சர்வஸ்வாமு மான்சி தொண்டு அறக்கட்டளை என்று ஒரு அமைப்பை தொடங்கியுள்ளார்.

பின்னர் தனி ஆசிரமம் அமைத்த இந்த போலி பாபா தன்னுடன் பெண்கள் உறவு கொண்டால் நேர்மறை சக்திகள் கிடைக்கும் என்று பல பெண்களை தனது ஆசை வலையில் வீழ்த்தி ஏமாற்றியுள்ளார். இதுதவிர போலியான பொருட்களை ஆன்மீக பொருட்கள் என அதிக விலைக்கு விற்பது, சிறப்பு பூஜை என பணக்காரர்களிடம் காசு கறப்பது என பல மோசடி செயல்களில் ஈடுபட்ட இந்த போலி பாபா மீது பலர் புகாரளித்த நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.