மாணவியை குடிக்க வைத்து கற்பழித்த சக மாணவர்கள்

girl
Last Modified ஞாயிறு, 1 ஜூலை 2018 (09:58 IST)
ஆந்திராவில் கல்லூரி மாணவியை சக மாணவர்கள் குடிக்க வைத்து கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பிரபல பொறியியல் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவரின் பிறந்தநாளையொட்டி அவர் சக மாணவ மாணவிகளுக்கு பார்ட்டி ஏற்பாடு செய்தார்.
 
பார்ட்டிக்கு வந்த மாணவி சக மாணவர்களின் தொடர் வற்புறுத்தலால் குடித்தார். தன்னிலை மறந்த மாணவியை சீனியர் மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து அந்த மாணவியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
 
இது குறித்து மாணவி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். கல்லூரி முதல்வர் மாணவர்களை கண்டித்தார். கல்லூரி நிர்வாகம் கேட்டுக்கொண்டதால் மாணவி போலிசில் புகார் அளிக்கவில்லை. 
 
இந்நிலையில் சில மாதங்களுக்கு பின்னர், வேறு ஒரு மாணவர் அந்த வீடியோவைக் காட்டி அந்த மாணவியை மிரட்டியுள்ளார். இதையடுத்து மாணவி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். போலீஸார் வழக்கு பதிவு செய்து அந்த மாணவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஏற்கனவே மாணவியை சீரழித்த மாணவர்களையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :