புதன், 11 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 24 அக்டோபர் 2022 (08:04 IST)

போட்டியில் இருந்து விலகிய போரீஸ் ஜான்சன்: பிரதமர் ஆகிறார் ரிஷி சுனக்!

rishi sunak
இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அடுத்த பிரதமருக்கான போட்டியில் போரிஸ் ஜான்சன் மற்றும் ரிஷி சுனக் ஆகிய இருவரும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் போரிஸ் ஜான்சன் தற்போது பிரதமர் பதவி போட்டியில் இருந்து விலகி விட்டதாக செய்திகள் வெளியானதை அடுத்து ரிஷி சுனக் பிரதமராக தேர்வு செய்யப்படுவது உறுதி என இங்கிலாந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன
 
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு போட்டியின்றி ரிஷி சுனக் தேர்வானதாக இன்று அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
நூற்றுக்கணக்கான ஆண்டுகள் இங்கிலாந்து நாட்டினர் இந்தியாவை ஆட்சி செய்த நிலையில் தற்போது இங்கிலாந்தை ஒரு இந்தியர் ஆட்சி செய்யப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva