திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (10:22 IST)

சீனாவின் எதிர்ப்பை மீறி அருணாச்சல பிரதேசம் சென்ற அமித்ஷா..!

Amitshah
அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு அமித்ஷா  சென்றுள்ள தகவல் வெளியானதை அடுத்து சீனா கடும் கண்டனம் தெரிவித்தது. இருப்பினும் சீனாவின் எதிர்ப்பை மீறி அமித்ஷா அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு பயணம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்தியாவுக்கு சொந்தமான அருணாச்சல பிரதேசத்தை தெற்கு தீபத் எனக் கூறியசீனா சொந்தம் கொண்டாடிவரும் நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் அருணாச்சல பிரதேசத்தின் ஒரு சில பகுதிகளுக்கு சீனா வேறு பெயரை வைத்து சூட்டப்பட்டதற்கு இந்தியா கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் அருணாச்சலப் பிரதேச விவகாரம் இந்தியா சீன இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா  அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கிபிதூ என்ற கிராமத்திற்கு சென்றார். மேலும் அங்கு துடிப்பான கிராமங்கள் திட்டம் என்ற திட்டத்தையும் தொடங்கி வைத்தார். 
 
அருணாச்சல பிரதேசத்துக்கு அமித்ஷா சென்றதற்கு சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். அருணாச்சல பிரதேசம் சீனாவின் பிராந்தியம் என்றும் இந்த பகுதியில் இந்திய அதிகாரிகள் நடவடிக்கை சீனாவின் இறையாண்மையை மீறுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran