வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (17:49 IST)

பிரிந்து சென்ற காதலி....21 மணி நேரம் மண்டியிட்டு அழுது கெஞ்சிய காதலர்

china love
சீனாவில் தன்னைவிட்டுப் பிரிந்த காதலி தன்னிடம் மீண்டும் சேர வேண்டி காதலர் சுமார் 21 மணி நேரம் மண்டியிட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

சீனாவில் அவ்வப்போது, பெருந்தொற்று போன்ற சம்பவங்களும் நடக்கிறது. உள்ளத்தை நெகிழவைக்கும் நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது.

சமீபத்தில், சீனாவில், பிறப்பு விகிதம் குறைந்து வரும் நிலையில், கல்லூரி மாணவர்கள் காதல் செய்ய வேண்டி, ஏப்ரல் 1 முதல் 7 வரை விடுமுறறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சீனாவில் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் என்ற மாகாணத்தில், டஜாவ் என்ற நகரம் உள்ளது. இங்குள்ள ஒரு அலுவலகத்தின் வாசலில், இளைஞர் ஒருவர்  நீண்ட நேரம் மண்யிடிட்டு அழுதபடி  இருந்துள்ளார்.

கடந்த மார்ச் 28 ஆம் தேதி இப்போராட்டத்தைத் தொடங்கிய அவர், அடுத்த நாள் காலை 10 மணிவரை போராட்டத்தைத் தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து சீனா  நாளிதழ்கள், கொட்டும் பனியிலும், மழையிலும், கூட பிரிந்துபோன தன் காதலியின் வருகைக்காக அவர் சுமார் 21 மணி நேரம் தொடர்ந்து மண்ணியிட்டடு கெஞ்சிவந்துள்ளதாகவும், அவருக்கு அருகில் பூங்கொத்துகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.