திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 5 ஏப்ரல் 2023 (18:03 IST)

வங்கதேசம் :ஜவுளி பஜாரில் தீ விபத்து... 100க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசம்!

bangladesh
வங்கதேச நாட்டின் ஏற்பட்ட தீவிபத்தில் நூற்றுக்கணக்கான கவுளி கடைகள் எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நமது அண்டை  நாடான வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

வங்கதேச நாட்டின் தலை நகர் டாக்காவில், மிகப்பெரிய ஜவுளி சந்தையான பங்கா பஜார் உள்ளது. இந்த பஜாரில் அந்த நாட்டைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமமான கடைகள் உள்ளன.

இந்த நிலையில், நேற்று காலையில், இந்த பஜாரில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. உடனே குபுகுபுவென்று தீ அடுத்தடுத்த கடைகளுக்குப் பரவி பெரும் விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவன் இடத்திற்கு 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் 100க்கும் மேற்பட்டோர் வந்து, தீயயணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில், நூற்றுகணக்கான கடைகள் எரிந்து நாசமடைந்தனர்.

இந்த விபத்தில்,8 பேருக்கு பலத்தத காயமேற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.