1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (18:01 IST)

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரொனா பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் விஐபிக்களுக்குக்ம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வருகிறது 
 
அந்த வகையில் சற்று முன்னர் வெளியான தகவலின்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
 
தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் தன்னை சமீபத்தில் சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் படியும் அமிர்ஷா அவர்கள் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அமித்ஷா அவர்களுக்கு லேசான கொரோனா தொற்று மட்டுமே இருப்பதாகவும் இருப்பினும் மருத்துவர்களின் அறிவுரைப்படி தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமித்ஷா விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என பாஜக தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்