1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Amitshah plan cancel JP Nadda comes Chennai

கூட்டணி குளறுபடி; அமித்ஷா விசிட் ரத்து! – சென்னை வரும் ஜே.பி.நட்டா!

National
அதிமுக – பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் சென்னை வரும் அமித்ஷாவின் பயண திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முன்னதாக சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜக – அதிமுக கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என அதிமுக கூறி வர, பாஜக அதை மறுத்து வருவதால் கூட்டணியில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனவரி 14ல் துக்ளக் பத்திரிக்கை ஆண்டு விழாவிற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா இந்த பிரச்சினை குறித்து ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அவரது சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா துக்ளக் விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.

பாஜக – அதிமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து ஜே.பி.நட்டா ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
டிரம்பின் டுவிட்டர் கணக்கு முடக்கம்: தவறான தகவல்களை பரப்பியதால் நடவடிக்கை!