இது சரிபடாது.. அடுத்து டிராக்டர் பேரணிதான்! – பேச்சுவார்த்தை தோல்வியால் விவசாயிகள் முடிவு!
நேற்று மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இன்றும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரொ விவசாயிகள் பலர் டெல்லியில் கடந்த 41 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்களிடம் மத்திய அரசும் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
முன்னதாக 6ம் கட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் கண்ட நிலையில் நேற்று 7ம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அதில் விவசாயிகள் வேளாண் சட்டங்களை முழுவதும் திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் சட்ட திருத்தங்கள் மட்டுமே செய்ய முடியும் என அரசு தரப்பில் கூறப்பட்டதால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாய அமைப்புகள் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.