ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 27 நவம்பர் 2019 (17:41 IST)

பிரதமருக்கு மட்டும்தான் பாதுகாப்பு; அமித்ஷா அறிவிப்பு! கடுப்பான காங்கிரஸ்!

இந்தியாவில் பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்களுக்கு மட்டுமே எஸ்.பி.ஜி சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்படும் என அமித்ஷா சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது காங்கிரஸுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு அவரது குடும்பத்தாரான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு பிரதமருக்கு அளிக்கப்படும் சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இதுநாள் வரை தொடர்ந்து வந்த அந்த பாதுகாப்பை திரும்ப பெற்ற மத்திய அரசு அவர்களுக்கு மத்திய ஆயுத போலீஸ் படையின் பாதுகாப்பை வழங்கியுள்ளது.

இந்நிலையில் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பாதுகாப்பு சட்டத்தில் புதிய சட்ட திருத்தத்தை மேற்கொண்டுள்ளார். அதன்படி சிறப்பு பாதுகாப்பு படையான எஸ்பிஜியின் பாதுகாப்பு பிரதமர் மற்றும் அவரோடு வாழும் அவரது உறவினர்களுக்கு மட்டுமே செல்லுப்படியாகும். முன்னாள் பிரதமர்களுக்கு 5 ஆண்டு காலம் வரையிலும் அதிகபட்சம் எஸ்பிசி பாதுகாப்பு அளிக்கலாம் என்று மாற்றியுள்ளனர்.

இந்த சட்டத்தின் அடிப்படையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு கிடைக்க வாய்ப்பில்லை. காங்கிரஸ் தலைவர்கள் பாதுகாப்பில் மத்திய அரசு மெத்தனம் காட்டுவதாக காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் ஏற்கனவே பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த புதிய திருத்தம் அவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.