செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (17:17 IST)

நேரில் ஆஜராக வேண்டும்… அமித் ஷாவுக்கு நீதிமன்றம் சம்மன்!

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஒருவர் குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் அமித்ஷா நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

திருணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி. இவர் குறித்து அவதூறு பரப்பியதாக அமித் ஷா மீது கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 22 ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.