வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 21 பிப்ரவரி 2019 (08:30 IST)

அம்பானி வீட்டின் அடுத்த கல்யாணம்! களைகட்டும் கொண்டாட்டங்கள்

அம்பானி, நீடா அம்பானியின் மகள் ஈஷா அம்பானியின் திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்தபோது மும்பையே கோலாகலமாக இருந்தது. இந்தியாவின் முக்கிய பிரபலங்கள் பலர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் அம்பானி வீட்டின் அடுத்த கொண்டாடமாக அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், வைர வியாபாரி ரசல் மேத்தா- மோனா மேத்தா தம்பதியின் மகள் ஷோல்கா மேதாவுக்கும் மார்ச் மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கான கொண்டாட்டங்கள் அம்பானியின் அன்டிலியா வீட்டில் இப்போதே தொடங்கிவிட்டன.

மகள் திருமணத்தைவிட மகள் திருமணத்தை இன்னும் பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ள அம்பானி குடும்பத்தினர் இன்னும் ஒரு மாதத்திற்கு திருமண விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர். நேற்று நடந்த திருமண கொண்டாட்ட ஆரம்ப விழாவில் ஆகாஷ் அம்பானியின் பாட்டி கோகிலா பென். அத்தை டினா அம்பானி, முக்கிய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் ஆகாஷ் அம்பானி - ஷோல்கா மேதா ஆகியோர்களின் திருமண அழைப்பிதழ் குறித்த வீடியோவும் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படி ஒருதிருமண அழைப்பிதழ் இந்தியாவில் இதுவரை எந்த திருமணத்திற்கும் அமைக்கப்பட்டிருக்காது என்று பலர் கமெண்ட் அளித்து வருகின்றனர்.