டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச முடிவு:

Last Modified செவ்வாய், 14 ஜனவரி 2020 (13:47 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் மும்பையில் இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சற்றுமுன் தொடங்கி உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது
சற்று முன் வரை இந்திய அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளில் விளையாடும் வீரர்களின் விபரம் பின்வருமாறு

இந்தியா: ஷிகர் தவான், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராத் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, பும்ரா
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பின்ச், ஸ்டீவன் ஸ்மித், லாபுசாஞ்சே, டர்னர், அலெக்ஸ் கேரே, ஆஷ்டன் ஆகர், கம்மின்ஸ், ஸ்டார்க், ரிச்சர்ட்சன், ஆடம் ஜாம்பா


இதில் மேலும் படிக்கவும் :