1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 ஜூலை 2022 (08:44 IST)

காஷ்மீர் மேகவெடிப்பு; மீண்டும் தொடங்கிய அமர்நாத் யாத்திரை!

amarnath
காஷ்மீரில் மேகவெடிப்பால் நிறுத்தப்பட்ட அமர்நாத் யாத்திரை இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் அமர்நாத் கோவில் யாத்திரைக்கும் பக்தர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் இந்த ஆண்டும் கடந்த வாரம் முதலாக பக்தர்கள் அமர்நாத் யாத்திரையை தொடங்கினர். இந்நிலையில் அமர்நாத் குகை செல்லும் வழியில் உள்ள பாதையில் மேகவெடிப்பு ஏற்பட்டது.

இதனால் 16 பேர் பலியான நிலையில் மேலும் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அமர்நாத் பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பக்தர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது நிலமை சீராகியுள்ள நிலையில் மீண்டும் அமர்நாத் புனித பயணத்தை இன்று முதல் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.