தொடங்கியது அமர்நாத் புனித யாத்திரை! – 3 லட்சம் பேர் முன்பதிவு!
காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் கோவில் புனித யாத்திரை இன்று தொடங்கியுள்ளது.
காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோவில் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பல லட்சம் பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. அமர்நாத் குகைக் கோவிலுக்கு செல்லும் முதலாவது குழுவின் பயணத்தை காஷ்மீர் துணை நிலை ஆளுனர் மனோஜ் சின்ஹா நேற்று தொடங்கிவைத்தார். பகல்காம் மற்றும் பதால் அடிவார முகாம்களை பயணிகளின் வாகனங்கள் சென்றடைந்ததும் அங்கிருந்து கால்நடையாக புனித யாத்திரையை பக்தர்கள் தொடங்குவார்கள்.
வருகிற ஆகஸ்ட் மாதம் 11ம் தேதியன்று முடிவடைய உள்ள இந்த யாத்திரைக்கு செல்ல 3 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பதிவு செய்துள்ளனர்.