1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (12:42 IST)

காங்கிரஸின் அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கம்: மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்..!

Mallikarjun Kharge
காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
கடந்த 2018 ஆம் ஆண்டு வருமான வரி 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாக 210 கோடி ரூபாய் காங்கிரஸ் கட்சிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி ஆகிய வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களின் ஊதியம், மின்கட்டணம் கூட செலுத்த முடியாத நிலை இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகா துணை கார்கே தெரிவித்துள்ளதாவது:
 
மக்களவைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே, நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் கணக்குகளை அதிகாரப் போக்கில் மிதக்கும் மோடி அரசு முடக்கியுள்ளது. இது இந்திய ஜனநாயகத்தின் மீதான ஆழமான தாக்குதல்!
 
அரசியல் சட்டத்திற்குப் புறம்பாக பாஜக வசூலித்த பணத்தை அவர்கள் தேர்தலுக்குப் பயன்படுத்துவார்கள், ஆனால் Crowd Funding முறை மூலம் நாம் சேகரிக்கப்படும் பணம் சீல் வைக்கப்பட்டது!
 
அதனால்தான், எதிர்காலத்தில் தேர்தல் வராது என்று கூறினேன். நாட்டில் உள்ள பல கட்சி அமைப்பைக் காப்பாற்றவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் நீதித்துறையிடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.
 
இந்த எதேச்சதிகாரத்திற்கு எதிராக நாம் வீதியில் இறங்கி கடுமையாகப் போராடுவோம்!"
 
இவ்வாறு  மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva