வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 பிப்ரவரி 2024 (13:19 IST)

கன்னியாகுமரி விஜய் வசந்துக்கு மட்டும் தான், மாற்றமில்லை. கறாரான சொன்ன காங்கிரஸ்..!

vijay vasanth
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு தான் ஒதுக்கப்படும் என்று கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அந்த தொகுதியில் விஜய் வசந்த் தான் போட்டியிடுவார் என்று கூறப்பட்டு வருகிறது.

விஜய் வசந்த் அந்த தொகுதியில் செல்வாக்கு உள்ளவர் மட்டும் இன்றி அவரது அப்பாவுக்கு அந்த தொகுதியில் இன்றும் நல்ல பெயர் இருக்கிறது என்றும் எனவே விஜய் வசந்த் அந்த தொகுதியில் போட்டியிடுவது உறுதி என்று கூறப்பட்டு வருகிறது.

இருப்பினும் கன்னியாகுமரியை சேர்ந்த சில காங்கிரஸ் பிரமுகர்கள் டெல்லி சென்று கன்னியாகுமரி தொகுதியை தங்களுக்கு கேட்க காங்கிரஸ் கறாராக சொல்லிவிட்டதாம், கன்னியாகுமரி தொகுதியை விஜய் வசந்துக்கு மட்டும் தான் அந்த தொகுதியை வேறு யாருக்கும் கொடுக்கும் எண்ணம் இல்லை, நீங்கள் போய் தேர்தல் வேலையை கவனியுங்கள் என்று சொல்லிவிட்டதாம். இதனால் அந்த இரண்டு காங்கிரஸ் பிரமுகர்கள் புலம்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

Edited by Mahendran