வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : புதன், 14 பிப்ரவரி 2024 (14:05 IST)

மக்களவை தேர்தலில் சீட் இல்லை... காங்கிரஸ் மீது விஜயதாரணி அதிருப்தி..! பாஜகவில் இணைகிறாரா..?

vijayadharani
மக்களவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மேலிடும் மறுப்பு தெரிவித்துள்ளதால் அந்த கட்சியின் எம்எல்ஏ விஜயதாரணி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பாஜகவில் இணையுள்ளதாக வெளியான தகவலுக்கு ஆச்சரியமாக உள்ளது என்று அவர் பதில் அளித்துள்ளார்.
 
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபைத் தொகுதியில் தொடர்ந்து 3-வது முறையாக எம்.எல்.ஏ.வாக விஜயதாரணி இருந்து வருகிறார்.
 
சமீப காலமாக காங்கிரஸ் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக தீவிர அரசியிலில் இருந்து அவர் ஒதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே  வருகிற மக்களை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த அவர் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் இந்த முறை தனக்கு சீட்டு வழங்க வேண்டும் என கோரி இருந்தார்.
 
ஆனால் அவரது கோரிக்கையை காங்கிரஸ் மேலிடம் மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் காங்கிரஸ் விஜயதாரணி அதிருப்தியில் இருப்பதாகவும், விரைவில் அவர் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியானது.

 
இந்நிலையில் பாஜகவில் இணைகிறீர்களா என்ற கேள்விக்கு, நான் பாஜகவில் இணைகிறேனா, ஆச்சரியமாக இருக்கிறது என்று விஜயதாரணி பதில் அளித்துள்ளார்.