திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 15 பிப்ரவரி 2024 (07:20 IST)

திமுக கூட்டணியில் காங்கிரஸ், கமல் அதிருப்தி.. தொகுதி உடன்பாட்டில் சிக்கல்..!

திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக சென்று கொண்டிருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளிவந்து கொண்டிருந்தாலும் காரசாரமான விவாதங்கள் நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஐந்து தொகுதிகள், புதுவையை சேர்த்து ஆறு தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்பதை திமுக பிடிவாதமாக இருப்பதால் காங்கிரஸ் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த முறை கொடுத்த 10 தொகுதியாவது கொடுக்க வேண்டும் என்றும் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது பாராளுமன்றத் தேர்தலின் போது அதிக தொகுதிகள் ஒதுக்குவதாக வாக்குறுதி கொடுத்ததையும் காங்கிரசார் நினைவுபடுத்துகின்றனர்.

ஆனால் 5 தொகுதிகளுக்கு மேல் கிடையாது என்பதில் திமுக உறுதியாக இருப்பதால் காங்கிரஸ் அடுத்த கட்ட ஆலோசனையில் உள்ளது. அதேபோல் திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் போட்டியிட கமல் கட்சி எதிர்பார்ப்பதாகவும் இரண்டு தொகுதிகளிலும் டார்ச் லைட் சின்னத்தில் தான் போட்டு விடுவேன் என்றும் கூறியுள்ளதும் திமுகவுக்கு சந்தோஷத்தை அளிக்கவில்லை.

கமல்ஹாசனுக்கு ஒரே ஒரு தொகுதி தான் அதுவும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று கறாராக சொல்லி விட்டதாக தெரிகிறது. மற்றபடி விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையில் ஆன பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து விட்டதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மட்டும் ஒரு தொகுதி அதிகம் கொடுக்க திமுக முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


Edited by Siva