திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (07:11 IST)

பேச்சுவார்த்தை முடியும் முன்பே வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அகிலேஷ்.. காங்கிரஸ் அதிர்ச்சி..!

akilesh
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே திடீரென அகிலேஷ் யாதவ் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே மேற்கு வங்கம், பஞ்சாப், டெல்லி உள்பட ஒரு சில மாநிலங்களில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்குள் உடன்பாடு ஏற்படாததால் சில கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தம் 80 தொகுதிகள் இருக்கும் நிலையில் அதில் காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகள் மட்டுமே தருவோம் என்றும் அதை ஏற்றுக் கொண்டால் ராகுல் காந்தி பாதயாத்திரையில் கலந்து கொள்வோம் என்றும் இல்லை என்றால் கூட்டணி இல்லை என்றும் கறாராக அகிலேஷ் கூறிவிட்டார்.

இந்த நிலையில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே 16 வேட்பாளர்கள் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பும், நேற்று 11 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது பட்டியலையும் அகிலேஷ் வெளியிட்டார்

பேச்சுவார்த்தை முடியும் முன்பே வேட்பாளர் பட்டியலை அகிலேஷ் யாதவ் வெளியிட்டது காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்ட நிலையில் தற்போது அகிலேஷ்  15 லிருந்து 17 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க ஒப்புக் கொண்டதாகவும் இதை ராகுல் காந்தி ஏற்காவிட்டால் 80 தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று கூறியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva