வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 19 பிப்ரவரி 2024 (15:28 IST)

விஜயதரணியை மனமாற்றம் செய்தாரா செல்வப்பெருந்தகை? பாஜகவில் சேரவில்லை..!

காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி இன்னும் ஒரு சில நாட்களில் பாஜகவில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் சமீபத்தில் புதிய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்ற செல்வப் பெருந்தகை விஜயதரணியை மனமாற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
கன்னியாகுமரி தொகுதியில் தனக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று விஜயதரணி கேட்டதாகவும் அதற்கு காங்கிரஸ் மேலிடம் மறுத்துவிட்டது அடுத்து அவர் பாஜகவில் சேர இருப்பதாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் அதிரடியாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்பட்ட நிலையில் செல்வபெருந்தகை முதல் பணியாக விஜயதரணியை மனமாற்றம் செய்ததாகவும் இப்போதைக்கு விஜய் வசந்த் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடட்டும் என்றும் அதன் பின்னர் உங்களுக்கு தகுந்த பதவியை அளிக்கப்படும் என்றும் சமாதானப்படுத்தியதாகவும் தெரிகிறது 
 
இந்த சமாதானத்தை விஜயதரணி  ஏற்று கொண்டதாகவும் அதனால் அவர் பாஜகவில் இணையவில்லை என்றும் கூறப்படுகிறது
 
Edited by Siva